வைத்தியர்களின் கொடுப்பனவுகள்,ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்: சுகாதார அமைச்சர்!!

437

rajitha-senaratne_2-720x480
வைத்தியர்களின் கொடுப்பனவுகள், ஓய்வூதியங்கள் என்பன அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த வாரமளவில் வைத்தியர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை தற்போது வைத்தியர்களுக்கான அனைத்து வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தொழிற்சங்க உரிமைகளை பெறுவதற்கான ஆயுதம் பேச்சுவார்த்தையே அன்றி வேலைநிறுத்தப் போராட்டம் அல்லவென்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தொழிற்சங்க அமைப்புகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுக்க தயாராகவிருப்பதாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.