நுவரெலியா திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். குறித்த விபத்து நேற்று இரவு 11.30 மணியளவில், அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொட்டகலை, தலவாக்கலை பகுதியிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கெப் ரக வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில், மோட்டர் சைக்கிளில் சென்ற இருவருமே பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெப் ரக வாகன சாரதியை கைது செய்து விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






