விமான நிலையத்தில் மாறி மாறி கன்னத்தில் அறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!

591

Slap

திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவாவை அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் சரமாரியாக அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குடிபோதையில் அதிமுக நிர்வாகி ஒருவரிடம் ஆபாசமாக சசிகலா புஷ்பா பேசும் ஓடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பாவும் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின. ஆனால் இந்த படங்கள் போலியாக சித்தரிக்கப்பட்டவை என திருச்சி சிவா தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் சென்னைக்கு வருவதற்காக திருச்சி சிவாவும் அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா தமது குடும்பத்தினருடனும் காத்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த வாக்குவாதம் முற்றி திருச்சி சிவாவின் கன்னத்தில் சரமாரியாக சசிகலா புஷ்பா அடிக்கும் நிலை வரை சென்றுள்ளது.

இதனிடையே இச்சம்பவம் குறித்து சசிகலா புஷ்பாவும், திருச்சி சிவாவும் தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி மூலம் விளக்கம் அளித்தனர்.

சசிகலா புஷ்பா கூறுகையில், முதல்வர் ஜெயலலிதா குறித்து யார் விமர்சித்தாலும் தமக்கு கோபம் வரும் என்றார். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்றவர், முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசினால் அதிமுகவினர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

தி.மு.க, எம்.பி. திருச்சி சிவா அ.தி.மு.க., ஆட்சி குறித்தும் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் தவறாக விமர்சி்த்தார். அதனால் அவர் கன்னத்தில் அறைந்தேன். அதில் அவர் கழுத்து செயின் அறுந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து திருச்சி சிவா கூறுகையில், சசி்கலா புஷ்பா என்னை காரணம் இன்றி திடீரென தாக்கினார். என் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தார். இதனால் எங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. எதற்காக கைகலப்பில் ஈடுபட்டார் என புரியவில்லை என அவர் கூறினார்.

டெல்லி விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் முன்னிலையில் தமிழக எம்.பி.க்கள் மோதலில் ஏற்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.