நாம் அழித்துவிட்டதாக நினைக்கும் வட்ஸ் அப் உரையாடல்கள் ஒருபோதும் அழிவது இல்லை என்று அப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கின் வசமுள்ள வட்ஸ் அப் தற்போது அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்ட் செய்து 3வது நபர் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வசதியை வழங்கி வருகிறது.
இந்நிலையில், வட்ஸ் அப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என அப்பிள் இயங்குளத்தின் பிரபல பாதுகாப்பு வல்லுனர் ஜோனதன் செட்சியார்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வட்ஸ் அப்பில் உரையாடல்களை நாம் அழித்தாலும், கிளியர் செய்தாலும் அல்லது ‘Clear all chats’ மூலமாக அழித்தாலும் அந்த உரையாடல்கள் முற்றிலுமாக அழிந்துவிடாது.
அதை 3வது நபரால் கண்காணிக்க இயலும். எனவே, போனில் இருந்து ‘வட்ஸ் அப் ஐ அழித்து விடுவது ஒன்றே ஒரே தீர்வு. என்கிரிப்சன் வசதியை கொண்டுவந்துள்ள போதிலும் இன்னும் வட்ஸ் அப் உரையாடல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதை அவரே சோதித்து பார்த்து உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.