
கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் நிதி நகரமாக மாற்றும் அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெறும் 12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக இன்று அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.இதனால், குறித்த அமைச்சரவை பத்திரத்தை நாளைய தினம் அமைச்சரவையில் தாக்கல் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், இந்தியாவின் சென்னை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான நிதி நகரமாக கொழும்பு துறைமுக நகரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், முதல் முறையாக இவ்வாறான நிதி நகரம் அறிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





