
இராணுவ சிப்பாய் ஒருவரை தொடர்ந்து மூன்று நாட்களாக பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய மதகுருவை மாதம்ப பொலிஸார் கைது செய்துள்ளனர்.மாதம்பை சத்சிரிகம விகாரையை சேர்ந்த 25 வயதுடைய மதகுருவையே பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் ஹிக்கடுவையை சேர்ந்தவர் எனவும், வவுனியாவில்உள்ள கனகராயன்குளம் இராணுவ முகாமில் உள்ளவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .குறித்த மதகுரு இராணுவ சிப்பாயுடன் முகப்புத்தகம் மூலம் நட்பு கொண்டிருந்தார்என சமூக ஊடக வலைத்தளம் மூலம் தெரியவந்துள்ளது.
இராணுவ சிப்பாய் கொத்மலையில் உள்ள பயிற்சி நிலையம் ஒன்றிற்கு வருகைதந்திருந்தார். அந்த நிலையில் மதகுருவின் விகாரையிலேயே தங்கியுள்ளார்.அதன் பின்னர் குறித்த சிப்பாய் சுகயீனம் காரணமாகவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதன் போதே சிப்பாய்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் மதகுருவை கைது செய்ததாகவும், சிலாபம் நீதிமன்றில்முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இருப்பினும் சம்பவம் தொடர்பில் மாதம்ப பொலிஸார் மேலதிக விசாரணைகள்முன்னெடுத்து வருகின்றனர்.





