
ரஜனி நடித்த கபாலி படம் ஒரு வாரத்தில் சுமார் ரூ. 250 கோடி அளவிற்கு வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இன்னும் காதலிக்காக பல திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருப்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்திற்காக ரஜனி எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று கேட்டால் உங்கள் தலை சுற்றிவிடும். படத்தில் நடித்தபோது 35 கோடி ரூபாய் சம்பளமாக பெற்ற அவர்,
படத்தின் லாபத்தில் 45 கோடி ரூபாய் அளவிற்கு பங்கு வாங்கியுள்ளார்.ஆக மொத்தம் 80 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக வாங்கியுள்ள ரஜினிக்கு, இதன்மூலம் இந்தியாவின் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமை கிடைத்துள்ளது.





