பூஜையின் போது கண் திறந்த அம்மன் சிலை- வியப்பில் மக்கள்!!

647

muthumariamman-01-1470020429

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் பூசாரி பூஜை நடத்திக் கொண்டிருக்கும் போது அம்மன் சிலை கண் திறந்ததாக கூறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 3வது செக்கடி தெருவில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு கோவிலில் திருவிழா கடந்த 29ஆம் திகதி தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இரவு 08.30 மணியளவில் கோவில் பூசாரி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அம்மன் திடீரென்று கண் திறந்து பார்த்ததாக பூசாரி கூறவே அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் சென்று அந்த அழகிய காட்சியை கண்டு பரவசம் அடைந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் விரைவாக பரவியது. இதை தொடர்ந்து, அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பெண்கள் அனைவரும் அங்கேயே உட்கார்ந்து பக்தி பாடல்கள் பாடியும், குலவை போட்டவாறும் வழிபட ஆரம்பித்தனர்.இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.