
சவூதி அரேபியாவானது பொருளாதார சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளதால் அங்கு பணிபுரியும் இலங்கையர் பலர் தொழில்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்காரணமாக தற்போது சவூதியில் பணிபுரிந்த 12 பேர் தொழில்வாய்ப்பை இழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் உபுல் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் சவூதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவினால் அங்குள்ள பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அல்சா சா என்ற நிறுவனம் ஒன்றில் 10 வருடமாக தொழில்புரிந்து வந்த 12பேர் தொழில்வாய்ப்பை இழந்துள்ளதாகவும், ரியாத்தில் உள்ள நிறுவனம் ஒன்றும் நட்டத்தில் இயங்குவதாகவும் இதில் 100 இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள குறித்த இலங்கையர்களின் நாளாந்த உணவு தேவைகளுக்காக வேண்டிய பணத்தை வழங்குமாறு இலங்கை தூதுவராலயத்தை பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





