
எட்டு மற்றும் ஒன்பது வயதான இரு சிறுவர்களை ஒரு மாதமளவில் அடிக்கடி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும், இளைஞர் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வென்னப்பு – தோப்புதோட்ட பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களாவர். இதேவேளை, சந்தேகநபர் குறித்த இரு சிறுவர்களுக்கும் ரெஸ்லின் இறுவெட்டை காண்பிப்பதாக கூறி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு நீலப்பட காணொளியை காண்பித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு பலமுறை அந்த சிறுவர்களை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களின் தாய் வென்னப்புவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதோடு அவரை மாரவில மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





