கருத்தரிக்காத மனைவியின் கையை துண்டித்த கணவன்!!

859

?????????????????????????????????????????????????????????

கென்யாவில் 7 வருட திருமண வாழ்க்கையில் கருத்தரிக்காத மனைவியின் கைகளை துண்டித்து, கொடுமையாக தாக்கியுள்ள கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். கென்யாவின் Masii பகுதியை சேர்ந்த Stephen Ngila, Jackline Mwende தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.

இதனால் கோபம் கொண்ட கணவன், அவ்வப்போது தனது மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். ஜாக்குலினுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டதால் மருத்துவமனை சென்று கடந்த வருடம் சிகிச்சை பெற்றுள்ளார், ஆனால் ஸ்டீபன், இதற்கான சிகிச்சை பெற மறுத்துள்ளார்.இதற்கிடையில், உனக்கு கருத்தரிக்க தகுதியில்லை என கூறி தனது மனைவியை மிக கொடுமையாக அடித்துவந்துள்ளார். இதனால் வீட்டை விட்டு சென்ற ஜாக்குலின், 3 மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், ஒரு நாள் இரவு தனது மனைவியுடன் கடும் சண்டையில் ஈடுபட்ட கணவன், இது தான் ‘உனது கடைசி நாள்’ எனக்கூறி, கட்டையை எடுத்து அவரை வெளுத்து வாங்கியுள்ளார்.இதில், ஜாக்குலினின் முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது, மேலும் அவரது கைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கே பரிதாப தோற்றத்தில் இருக்கும் ஜாக்குலினுக்கு பெண்கள் அமைப்பு பாதுகாப்பு கொடுத்துள்ளது. மேலும், இக்குற்றத்தினை செய்துவிட்டு தப்பியோடி கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.