எமிரேட்ஸ் விமான விபத்தில் 282 பயணிகளை காப்பாற்றி தனது உயிரை விட்ட ரியல் ஹீரோ!!

682

Emirates

நேற்று எமிரேட்ஸ் விமானம் திருவனந்தபுரத்திலிருந்து சென்று துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது விமானம் விபத்துகுள்ளாகி ஒரு பகுதி தீப் பிடித்தது.

உடனடியா தீயணப்பு படை வீரர்கள் தீயை அணைத்ததோடு மீட்பு பணியில் ஈடுபட்டு 282 பயணிகளை காப்பாற்றினர். மிகபெரிய விபத்தில் சிறப்பாக செயல்ப்பட்ட வீரர்களையும் துரிதமாக செயல்பட்டு எமிரேட்ஸ் நிறுவனத்தாரையும் பாராட்டினர்.

இந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ராசல் அல் கைமாவை சேர்ந்த ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் என்பவர் உயிரழந்தார். அவரின் தியாகம் போற்றத்ததக்கது என‌ பல்வேறு தரப்பினரும் மறைந்த அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.