பயங்கரவாதச் செயற்பாடுகளில் எவரும் ஈடுபட அனுமதியில்லை : கோட்டாபாய ராஜபக்ச­!!

762

kotapaya

இலங்கையிலிருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ச­ தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாட்டின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் இடம ளிக்கப் போவதில்லை. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தவிருப்பவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இப்படியான ஆபத்து ஏதும் அங்கு இல்லை. பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை படையினர் எடுப்பர்.

யாழ்ப்பாணத்தில் 99 வீதம் தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர். அங்கு படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

எனவே பாகிஸ்தான் தீவிர வாதிகளினால் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியம் எப்போதும் ஏற்படாது. எனினும் இந்திய கரையோரங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.