இலங்கை சார்­பாக ஒலிம்பிக்கில் 7 வீரர்கள், 2 வீராங்­க­னைகள்!!

520

SL

ரியோ விளை­யாட்டு விழாவில் இலங்கை சார்பாக 7 வீரர்­களும் 2 வீராங்­க­னை­களும் பங்குபற்றுகின்­றனர்.

ஒலிம்பிக் வர­லாற்றில் தனது மூன்­றா­வது ஒலிம்பிக் போட்­டி­களில் பங்­கு­பற்றும் மரதன் ஓட்ட வீரர் அநு­ராத இந்த்­ரஜித் குறே, இன்று நடை­பெறும் ரியோ ஒலிம்பிக் ஆரம்ப விழா அணி­வ­குப்பில் தேசிய கோடியை ஏந்தி இலங்கை அணிக்கு தலைமை தாங்­க­வுள்ளார்.

இவரை விட சுமேத ரண­சிங்க (ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல்), நிலூக்கா கீதானி ராஜ­சே­கர (பெண்களுக்­கான மரதன்), நிலூக்க கரு­ணா­ரட்ன (பட்­மின்டன்), சுதேஷ் பீரிஸ் (ஆண்­க­ளுக்­கான பளு­தூக்கல்), மங்­கள சம­ரக்கோன் (ஆண்­க­ளுக்­கான குறி­பார்த்து சுடுதல்), மெத்யூ அபே­சிங்க (ஆண்க­ளுக்­கான நீச்சல்), கிமிக்கோ ரஹீம் (பெண்­க­ளுக்­கான நீச்சல்), சமார தர்­ம­வர்­தன (ஜூடோ) ஆகி­யோரும் இலங்கை சார்­பாக போட்­டி­யி­டு­கின்­றனர். இவர்கள் தத்­த­மது அதி சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­துவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இலங்கை சார்­பாக முத­லா­வது போட்­டியில் பங்­கு­பற்ற இருப்­பவர் கிமிக்கோ ரஹீம் ஆவார். இவர் எதிர்­வரும் 7ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பெண்­க­ளுக்­கான 100 மீற்றர் மல்­லாக்கு நீச்சல் போட்டிக்கான முதலாம் சுற்றில் பங்­கு­பற்­ற­வுள்ளார்.

இலங்கை குழுவின் தலைமை அதி­கா­ரி­யாக தேசிய ஒலிம்பிக் குழுவின் பொரு­ளாளர் காமினி ஜயசிங்க செயற்­ப­டு­கின்றார். உதவி தலைமை அதிகாரியாக தேசிய ஒலிம்பிக் குழுவின் சிரேஷ்ட உதவித் தலைவர் தேவா ஹென்றி நியமிக்கப்பட்டுள்ளார்.