நடிகை சுவாதி சுப்ரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சுவாதிக்கு 29 வயது ஆகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு திருமணத்தை நடத்த பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்தனர். தொழில் அதிபர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் என்று பல வரன்களை பார்த்து தற்போது பொருத்தமான மாப்பிள்ளையை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வருடம் இறுதியில் சுவாதி திருமணத்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெலுங்கு பட உலகில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை சுஷ்மாராஜ் பெங்களூருவை சேர்ந்தவர். இவர் இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய்ஆண்டனி ஜோடியாக நடித்தார். திரிஷாவுடன் நாயகி படத்திலும் நடித்து உள்ளார். தற்போது ஜிந்தா என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
சுஷ்மாராஜ் தனது நீண்ட கால ஆண் நண்பர் ஒருவர் மீது காதல் வயப்பட்டார். அவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளார். இவர்கள் நிச்சயதார்த்தம் சமீபத்தில் ரகசியமாக நடந்ததாகவும் கூறப்படுகிறது.






