மீண்டும் வருவேன் : ஒலிம்பிக்கில் கால் முறிவைச் சந்தித்த வீரர்!!(வீடியோ)

598

Leg

ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியின் போது கால் முறிவுக்கு உள்ளாகிய பிரான்ஸ் வீரர், 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மீண்டும் வருவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் இருந்தவாறு தனது பேஸ்புக் தளத்தில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

தனது காலில் எற்பட்ட முறிவு சத்திரசிகிச்சையின் மூலமாக சரிசெய்யப்பட்டுள்ளது. நான் இப்பொது சந்தோஷமாக உணர்கின்றேன்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொள்கின்ற எனது பிரான்ஸ் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நான் செய்த தவறை அவர்கள் சரிசெய்வார்கள் என நான் நம்புகின்றேன்.

இதேவேளை எனது வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை ஜிம்னாஸ்டிக் போட்டியின் போது பிரான்ஸ் வீரர் (26) சமிர் எய்ட் ஜிம்னாஸ்டிக்கை முடித்து தரையிறங்கும்போது கால்முறிவுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.