தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் பக்தர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் இருந்து கைகளால் எடுத்த வடை 11 ஆயிரம் இந்திய ரூபாவுக்கு ஏலம் போயுள்ளது.
துரிஞ்சிகுப்பம் கிராமத்திலுள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் அண்மையில் 16ஆம் ஆண்டு ஆடிப்பூரம் விழா நடைபெற்றுள்ளது.
இவ்விழாவில் கொதிக்கும் எண்ணெயிலிருந்து கைகளால் பக்தர்கள் வடைகள் எடுக்கும் நிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது.
அவ்வாறு எண்ணெயிலிருந்து எடுக்கப்பட்ட வடைகளில் 7 வடைகள் ஏலம் விடப்பட்டன. அதில் முதல் வடை 11 ஆயிரத்து 100 ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.






