சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : 1000 ரூபாய் அபராதம் விதித்த கிராம நிர்வாகம்!!

880

Abuse

பீகார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சிறுமியை மிரட்டி பல முறை பலாத்காரம் செய்த இளைஞருக்கு அங்குள்ள கிராம நிர்வாகம் 1000 ரூபாய் அபராதம் விதித்து விடுவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் சித்பூர் கிராமத்தில்தான் இந்த அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள தலித் சமூகத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை அப்பகுதியில் உள்ள இளைஞன் ஒருவன் மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான்.

7வது வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி இதுகுறித்து தமது பெற்றோரிடம் தெரிவிக்க பயந்து மறைத்து வந்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தை பெற்றோரிடம் தெரிவித்துவிடுவதாக கூறி அந்த நபர் சிறுமியை மிரட்டி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறுமியுடன் உறவில் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து நடந்து வந்துள்ள நிலையில் சிறுமி கர்ப்பமானதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் பெற்றோருக்கு இந்த விவகாரம் தெரிய வரவே, அவர்கள் நியாயம் கேட்டு கிராம நிர்வாகிகளிடம் முறையிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இருதரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்ட கிராம நிர்வாகத்தினர் அதிர்ச்சி தரும் முடிவுக்கு வந்தனர்.

இதனிடையே இளைஞனின் பெற்றோர் இந்த விவகாரத்தினை சுமூகமாக முடித்து வைக்கும் பொருட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை தங்களது மகனே திருமணம் செய்து கொள்வார் என உறுதியளித்துள்ளனர்.

ஆனால் கிராம நிர்வாகத்தினர் அதற்கு உடன்படாமல், சிறுமிக்கும் அந்த இளைஞனும் இடையே நடந்துள்ளது பாலியல் பலாத்காரம் அல்ல எனவும், இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் கூடியே உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு அபராதமாக 1000 ரூபாய் நிர்வாகத்தினரிடம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இச்சம்பவம் சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.