அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க ஒரு போதும் ஏற்க போவதில்லை – ஜனாதிபதி மைத்திரி!!

329

ma
இலாபம் பெறுவதற்காக ஒரு காலமும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க தான்ஏற்றுக் கொள்ள போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கொழும்பு துறைமுக திறப்பு விழாவில் இன்றைய தினம் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டால் அரச நிறுவனங்கள் நட்டத்தையேபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் கொழும்பு துறைமுகம் மூலம் ரூபா 40 பில்லியன் ஈட்டிக் கொள்ளமுடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தேசிய கடன் சுமையை இல்லாதொழிப்பதே எமது நோக்கம் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.