ஜோன் ஆப்ரகாமுடன் இணையும் தோனி!!

673

dhoni

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் இந்திய பேட்மின்டன் லீக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

ஐ.பி.எல். போலவே இந்திய கால்பந்து சம்மேளனம் கால்பந்து‘லீக் போட்டியை நடத்துகிறது. அடுத்த வருடம் ஜனவரி 18ம் திகதி முதல் மார்ச் 30ம் திகதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்தப்போட்டிக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடக்கிறது. ஒவ்வொரு அணியில் 22 வீரர்கள் இடம்பெறுவார்கள். 10 வெளிநாட்டு வீரர்கள் உள்பட ஒரு முன்னணி வீரரும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெறுவார்கள்.

ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடிவு செய்து உள்ளார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனியும் கால்பந்து அணியை வாங்குகிறார். ஹிந்தி நடிகரும் நெருங்கிய நண்பருமான ஜோன் ஆப்ரகாமுடன் இணைந்து அவர் கால்பந்து அணியை வாங்குகிறார்.

கால்பந்து போட்டியில் டோனிக்கு இருக்கும் ஆர்வம் காரணமாகவே அவர் இந்தப்போட்டியில் முதலீடு செய்ய இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.