கடந்த மூன்று ஆண்டுகளில் நயன்தாராவின் முதல் தோல்விப் படம்!!

613

Nayanthara

3 ஆண்­டு­க­ளாக வெற்றி நாய­கி­யாக வலம் வந்த நயன்­தா­ராவின் திருநாள் படம் தற்­போது தோல்வியடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலை­யாள படங்­களில் நடித்து வரும் நயன்­தாரா வெற்றி நாய­கி­யாக வலம் வந்தார். வந்­தாரா என்று கேட்டால் ஆம் என்­பதே பதில். அதற்கு காரணம் உள்­ளது.

கடந்த 3 ஆண்­டு­களில் அவர் தமிழ், தெலுங்கு, மலை­யா­ளத்தில் 10 படங்­களில் நடித்தார். அந்த 10 இ ல் 8 படங்கள் ஹிட் மற்ற 2 படங்கள் ஓடி­விட்­டன.

கோலி­வூட்டில் தொடர்ந்து பிளாப் கொடுத்து வந்த ஜீவா, வெற்றி தார­கை­யான நயன்­தா­ரா­வுடன் சேர்ந்து ‘திருநாள்’ படத்தில் நடித்தார். நயன்­தா­ராவின் ராசிக்­கா­வது இந்த படம் ஓடும் என்று எதிர்பார்க்­கப்­பட்­டது.

‘திருநாள்’ படம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை வெளி­யா­னது. படத்தை பார்த்­த­வர்கள் நயன்­தாரா அசத்திவிட்டார் என்­றார்கள். ஆனால் படம் கல்­லா­கட்­டாமல் போயுள்­ளது. பாவம் ஜீவா­வுக்கு இதுவும் தோல்வி பட­மாக அமைந்­துள்­ளது.

தொடர்ந்து வெற்றிப் படங்­களை அளித்த பெரு­மை­யுடன் தில்­லாக ரூ.4 கோடி சம்­பளம் கேட்ட நயன்­தா­ரா­வுக்கு கடந்த 3 ஆண்­டு­களில் முதல் தோல்விப் பட­மாக ‘திருநாள்’ அமைந்­துள்­ளது.

திருநாள் ஊத்திக் கொண்ட கவ­லையில் இருக்கும் நயன்­தாரா வெங்­க­டே­ஷுடன் சேர்ந்து நடித்த பாபு பங்­காரம் படத்தை பெரிதும் எதிர்­பார்க்­கிறார். பாபு பங்­காரம் நாளை வெளியா­கி­றது.

தெலுங்கு படமான பாபு பங்காரம் தமிழில் டப் செய்யப்பட்டு செல்வி என்ற பெயரில் வெளியாகிறது.