
கர்நாடகா ஆளுநருக்கு நபர் ஒருவர் தன்னை கருணைக் கொலை செய்யக் கோரி கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் பீதர் மாவட்டம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், இவருக்கு பிரனீதா என்ற மனைவி உள்ளார்.
விக்னேஷ் அங்குள்ள பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினாலும், திருமணம் முடிந்து 12 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினாலும் அடிக்கடி இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் மனைவியை விவாகரத்து செய்ய முயன்றும், அது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இதனால் பிரச்சனை அதிகமாகியுள்ளதால் அம்மாநில ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், என் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். மேலும் தான் நடத்திவந்த டெய்லர் கடையையும் பறித்து விட்டனர், என்னுடைய வாழ்வாதாரமே அது தான்.
எனவே தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளேன், அது சட்டப்படி தவறு என்பதால் கருணை கொலை செய்ய அனுமதி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





