புதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்!!

446

Aiswarya

பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், 1994ல் உலக அழகி பட்டம் வென்றதோடு, சினிமாவிலும் ஜெயித்ததால் இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் பிரபலமானார். அதனால் பல நிறுவனங்கள் அவரை தங்கள் விளம்பரங்களில் நடிக்கவைக்க வரிசைகட்டி நின்றார்கள்.

1999 முதல் இவர் Longines என்ற கடிகார நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா. தற்போது மலேசியாவில் ஒரு கடிகாரக் கடையில் வைக்கப்பட்டிருந்த ஒரு விளம்பர போஸ்ட்டரை பார்த்துவிட்டு அதிகாரிகள் அது மிகவும் கவர்ச்சியாக உள்ளது என கூறி உடனே நீக்க சொல்லியுள்ளனர்.

மேலும் அதற்காக ஒரு பெரிய தொகையை அபராதமாகவும் விதித்துள்ளனர்.