3 வருடங்களுக்கு முன் இறந்த யானையின் உடலை தோண்டி எடுக்க முயற்சி!!

696

Elephant

உயிரிழந்த பெண் யானை ஒன்றின் சடலத்தை தோண்டி எடுக்க முற்பட்ட சம்பவம் ஒன்று பின்னவல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் இறந்த நிலையில் புதைக்கப்பட்ட இந்த யானையின் சடலத்தை நேற்று இரவு சிலர் தோண்ட முற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெகோ இயந்திரங்களைப் பயன்படுத்தி அவர்கள் இதனை செய்ய முற்பட்டுள்ளனர்.

எனினும் இந்த நடவடிக்கை பொலிஸாரின் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தற்போது அப் பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, அமைச்சர் காமினி ஜெயவிக்ரமவின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.