பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகளால் காதல் களமானது ஒலிம்பிக் மைதானம்!!(படங்கள்)

482

1

ஒலிம்பிக் மைதானத்தில் பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகளும் இடம்பெற்று அவை அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

சீனாவின் முன்னணி நீச்சல் வீராங்கனைகளில் ஒருவரான ஹே சி (25), கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 3 மீட்டர் ஸ்ப்ரிங்போர்ட் பிரிவு நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளி வென்ற அவருக்கு வைரம் பரிசாகக் கிடைக்கும் என அவர் நினைக்கவில்லை.

வெள்ளிப் பதக்கம் பெற்றுவிட்டு மைதானத்தின் நடுவே வந்து நின்ற ஹே சி அருகே சென்ற அவரது காதலர் கின் காய் (30) ஒற்றைக் காலால் மண்டியிட்டு ஒரு வைர மோதிரத்தை எடுத்து ஹே சி-யிடம் நீட்டி திருமண பந்தத்திற்கு அனுமதி கோரினார்.

நெகிழ்ந்து போன ஹே சி, கின்னின் காதல் பரிசை ஏற்றுக்கொண்டார். கின் காயும் நீச்சல் வீரரே. அவர் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். கின்னின் காதல் பரிசு குறித்து ஹே சி கூறும்போது,

அவர் என்னிடம் இன்று தனது திருமண எண்ணத்தை தெரிவிப்பார் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மோதிரத்தை கையில் ஏந்தியடி கின் அடுக்கடுக்கான வாக்குறுதிகளைத் தெரிவித்தார். ஆனால், என் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கைக்குரிய நபராக இருப்பேன் என கின் கூறியது என்னை மிகவும் நெகிழ வைத்தது என்றார். கின் கூறும்போது,

இன்று நான் என் திருமண ஆசையை வெளிப்படுத்துவேன், அதுவும் ஹே சி வெள்ளிப் பதக்கம் வென்றவுடன் மைதானத்திலேயே வெளிப்படுத்துவேன் என சற்றும் நினைக்கவில்லை. இவ்வளவு விரைவில் திருமண பந்தம் கைகூடும் எனவும் நினைக்கவில்லை என்றார் கண்ணில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டே.

இந்த சீன ஜோடிக்கு முன்னதாகவே ரியோ டி ஜெனீரோவில் பிரேசில் ஜோடி ஒன்று மைதானத்தில் காதலை பறிமாறிக் கொண்டது.

கடந்த வாரம் திங்கட்கிழமையன்று பிரேசில் ரக்பி விளையாட்டு வீராங்கனை இசாடோரா செருலோவின் காதலி மர்ஜோரி இன்யா, அவரின் விரலில் தங்க நிற ரிப்பனைக் கட்டித் திருமண விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

2 3 4 5 6