முல்லைத்தீவில் இளைஞர் யுவதிகளுக்கு கடற்பயிற்சி!!

836

 
முல்லைத்தீவு நாயாற்று கடற்படையினரின் முகாம் வளாகக் கடலில் பொலிஸ் பிரிவினரால் இளைஞர் யுவதிகளுக்கு விசேட கடற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட இளைஞர் யுவதிகளை ஒருங்கிணைத்து குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

கடலில் பயணிக்கும் போது இயற்கை அனர்த்தம் அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கடலில் மூழ்க நேரிட்டால் இலகுவான முறையில் எவ்வாறு நீந்திக்கரை சேர்வது தொடர்பாகவே பயிற்சிகள் நடை பெற்றுள்ளதாக பாதுகாப்பன வாழ்வு பொலிஸ்பிரிவு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பயிற்சி இன்று காலை 10.00 மணியில் தொடக்கம் மாலை 4.00 மணிவரை நடைபெற்றுள்ளது.

பயிற்சியின் முடிவில் பயிற்சி பெற்றவர்களுக்கு பொலிஸ்மா அதிபர் கையொப்பமிட்ட சான்றிதழ்கள் வழக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2 3 4