நீர்வீழ்ச்சி திடீரென உறைந்த காட்சி!!

505

625.0.560.320.500.400.194.800.668.160.90

புகையும் பொங்கும் நுரையுமாக பலத்த ஓசையுடன் கொட்டிக்கொண்டிருக்கும் நீர்வீழ்ச்சி, திடீரென உறைந்து பனிக்கட்டியானால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு காட்சியை கற்பனை செய்துதான் பார்க்க முடியும் அல்லவா? ஆனால், நிஜத்திலே சீனாவில் நடந்திருக்கிறது. படங்களுடன் வெளியாகி இருக்கும் இந்த அற்புதமான இயற்கை தரிசனம், வடக்கு சீனாவில், ஹெபாய் மாகாணத்தில் உள்ள, தாய்ஹாங் மலை அருவியில்தான்.

இந்த மலை அருவியின் வெப்பநிலை -12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை குறைந்துவிடுவதால், தொடர்ந்து கொட்டும் அருவியானது, அப்படியே உறைந்து, நீர் கொட்டுகிற நிலையிலே வெண்பனி கீற்றுகளாக நிற்கிறது. இது ஜனவரி மாதத்தில் சில நாட்கள் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த கொள்ளை அழகை தரிசிக்க, சுற்றுலாப் பயணிகள் மொய்த்து வருகின்றனர். இது அருவியாக விழும் நாட்களைவிட, உறைந்து காணப்படும் நாட்களிலே பார்வையாளர்கள் கூட்டம் அதிகரிக்கிறது.

அருவியில் குளிக்க முடியவில்லையே என்ற கவலைக்குப் பதிலாக உறைந்திருக்கும் காட்சியை புதிய இயற்கை வடிவமாக பார்க்கின்றனர். மலைமீது நீர்வீழ்ச்சியின் பேரிரைச்சலுக்குப் பதிலாக பேரமைதி நிலவுவதையும் மக்கள் ரசிக்கின்றனர்.மலைமீது பொங்கி பளிச்சிடும் வெண்பனி போலவே, பார்ப்பவர்கள் முகமும் மகிழ்ச்சியில் மாறுகிறது என்றால் அது மிகை அல்ல.