யாழில் பிரபல தாதா வாளால் வெட்டியதில் குடும்பஸ்தர் பலி!!

1025

Vaalvettu

முன்பகை காரணமாக யாழில் உள்ள பிரபல தாதா என அழைக்கப்பட்ட சன்னா வெட்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். சங்குவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (வயது 35) என்ற குடும்பஸ்தரேபலியாகியுள்ளார்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சன்னா என்று அழைக்கப்படும் பிரபல தாதா தனக்கும் குறித்த குடும்பஸ்தருக்கும் இடையில் இருந்த முன்பகையின் காரணமாக நேற்று புதன்கிழமை இரவுவீடு புகுந்து வெட்டியுள்ளார்.

உறவினர்களினால் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சன்னா யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் பொலிஸ் மீதான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர், குறித்த நபரை பொலிஸார் தேடுதல் நடாத்திய போதும், அவர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் புகுந்து குடும்பஸ்தரை வெட்டியுள்ளார்.

ஆனால், குறித்த சன்னா கிளிநொச்சி மாவட்டத்தில் தலைமறைவாகி இருக்கின்றார் என பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றும் பொலிஸார் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியதுடன்,பொலிஸாரின் ஒத்துழைப்பில் தான் குறித்த நபர் தலைமறைவாகியிருந்து, இவ்வாறானசட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ஒருவரை பொலிஸாரினால் கைது செய்ய முடியாமல்இருப்பதற்கான காரணம் என்ன என்றும் பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.