ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு வினோதம் : விட்டுக் கொடுக்காத அமெரிக்கா: பாடம் கற்ற பிரேசில்!!

422

 
ரியோ ஒலிம்பிக் 400*100 மகளிர் ரிலே ஓட்டப் போட்டியில் இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நேற்று நடந்த 400*100 மகளிர் ரிலே ஓட்டப் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் கோலை மாற்றிக் கொள்ளும் போது கோலை தவறவிட்டனர். இதனால் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் பிரேசில் வீராங்கனையின் இடர்பாட்டால் தான் அவ்வாறு நடந்ததாக அமெரிக்க வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டனர்.
இதனையடுத்து நடுவர்கள் வீடியோவை ஆராய்ந்து பார்த்ததில் பிரேசில் வீராங்கனையின் தோல்பட்டை அமெரிக்க வீராங்கனையின் உடலில் படுவதை கண்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து பிரேசில் அணியை நீக்கிவிட்டு, அமெரிக்க அணிக்கு மீண்டும் தனியாக போட்டி வைத்தனர். இதில் 41.77 வினாடியில் ஓட்டத்தினை நிறைவு செய்த அமெரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

2வது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேசமயம் பிரேசில் அணி இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

11 12 13 14