வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி அதிபர் நிருத்தியவாணி திருமதி. சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் மாணவியாகிய செல்வி திருமகள் பாஸ்கரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் கலாநிதி தமிழ் மணி அகளங்கன் தலைமையில் நேற்று (21.08.2016) மாலை 4.00 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் மற்றும் அவரது பாரியார் திருமதி குகநந்தினி இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதம அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து சிறி பிரபாகர குருக்கள் அவர்களினால் சலங்கை பூஜை நடத்தப்பட்டதுடன் ஆசியுரையும் வழங்கப்பட்டது. பூஜை செய்யப்பட்ட சலங்கையை ஆசிரியர் திருமதி. சூரியயாழினி வீரசிங்கம் தனது மானவியான செல்வி திருமகள் பாஸ்கரன் காலில் அணிவித்தார்.
பரதநாட்டிய அரங்கேற்றம் என்னும் செல்வி.திருமகள் பாஸ்கரனின் அரகேற்ற நூலின் முதற்பிரதி கலாநிதி தமிழ் மணி அகளங்கனால் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராத கிருஸ்ணனிடம் வழங்கப்பட்டது.
செல்வி திருமகள் பாஸ்கரனின் அரங்கேற்றத்தைத் தொடர்ந்து விசேட விருந்தினர்களை கௌரவிக்கும் நிகழ்வைத்தொடர்ந்து பிரதம விருந்தினர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் மற்றும் அவரது பாரியார் திருமதி குகநந்தினி இராதாகிருஸ்ணன் ஆகியோர் செல்வி. திருமகள் பாஸ்கரனின் பெற்றோரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விழாவின் கதாநாயகியகிய செல்வி. திருமகள் பாஸ்கரன் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணனால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் மா.தியாகராஜா, வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராஜா, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, கலைஞர் உடுவை சி.தில்லை நடராசா, முதுநிலை ஆடல் ஆசான் கலைஞர் வேல் ஆனந்தன், கலாநிதி திருமதி கிருஸ்சாந்தி ரவீந்திரா,நாட்டிய கலாயோதி திருமதி. துஸ்யந்தினி வேலுப்பிள்ளை. ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.



































