மகள் தாமினி நலமாக உள்ளார் : சேரன்!!

583

cheran

தனது மகள் தாமினி தற்போது நலமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் சேரன்.

இயக்குனர் சேரன் மகள் தாமினி தான் சந்துரு என்பவரை காதலிப்பதாகவும், அதற்கு தந்தை எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சமீபத்தில் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனால் கொலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. மகளின் புகாரால் வேதனை அடைந்த சேரன் சந்துரு பல பெண்களுடன் தொடர்புடையவர். அவரை விட்டு பிரிந்து மீண்டும் எங்களிடம் வர வேண்டும் என்று மகளுக்கு கோரிக்கை விடுத்தார்.

சேரனுக்கு ஆதரவாக அமீர் உள்பட பல இயக்குனர்களும் திரண்டனர்.
இதற்கிடையில் இப்பிரச்னை நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது காதலனை பிரிந்து பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தாமினி கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தந்தை சேரனுடன் தாமனி செல்ல அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சேரன் கூறுகையில் என் மகள் வீட்டுக்கு திரும்பி வந்தபிறகு ஆறுதல் அடைந்திருக்கிறேன். இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

கடந்த சில வாரங்களாக கடுமையான சூழலை சந்தித்து வந்தேன். இப்போது அதிலிருந்து விடுபட்டிருக்கிறேன். மேலும் திரைத்துறையில் நான் நிறைய நண்பர்களை பெற்றிருக்கிறேன் என்பதை இந்த சம்பவத்தால் உணர்ந்துள்ளேன்.

தாமினி தற்போது வீட்டில் இருக்கிறார் என்றும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு விரைவில் தனது படிப்பை தொடர்வார் எனவும் கூறியுள்ளார்.