ஜெருசலத்தில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர்!!

560

Abuse

ஜெருசலத்தில் ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக, இலங்கையர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த சந்தேகநபர், அங்கு வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன்படி, சிறுமியின் வீட்டுக்கு சுத்தம் செய்யும் பணிகளுக்காக சென்ற வேளையே அவர் இந்த தீங்கை இழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, 46 வயதான குறித்த நபர் சுமார் மூன்று வருடங்கள் அந்த வீட்டில் பணிபுரிந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது, சிறுமியின் தாய் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாயிடம் சென்று சிறுமி இது குறித்து முறையிட்ட வேளை, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இவரைக் கைது செய்வதற்காக ஜெருசலம் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.