இந்தியாவின் முதல் இடத்தை பறித்து : சாதனை படைத்த பாகிஸ்தான் அணி!!

431

Pak

இந்தியா, மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய கடைசி டெஸ்ட் போட்டி மழையால் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால், பாகிஸ்தான் அணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் யார் முதல் இடம் பிடிப்பார்கள் என்ற போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. தற்போது டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியா அணி இலங்கை அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் அவுஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்ததால் முதல் இடத்தை இழக்கும் தருவாயில் இருந்தது.

இதனால், இந்திய அணி மேற்கிந்திய தொடரை 3-0 என்ற கணக்கில் கைபற்றினால் முதல் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், இந்திய அணி 108 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி இங்கிலாந்து தொடரை 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடித்ததால் 111 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இலங்கையுடன் தொடரை முற்றிலும் இழந்த அவுஸ்திரேலியா அணி 108 புள்ளிகளுடன் தசம விகிதத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.