2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் விசேட சித்தி பெற்று, நாடளாவிய ரீதியில் முதல் 10 இடங்களைப்பெற்ற 12 மாணவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்தனர்.
2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் வெளிப்படுத்திய திறமை குறித்து ஜனாதிபதி இதன்போது பாராட்டியதுடன், மாணவர்களுக்கு மடிக்கணனிகளும் வழங்கப்பட்டன.
அத்துடன், மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.







