தரம் குறைந்த பொலித்தீன்கள் கைப்பற்றல்!!

513

155079409111
உணவுகளை பொதி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட தரம் குறைந்த பொலித்தீன் ஒரு தொகையினை நுகர்வோர் அதிகார சபையினர் கைப்பற்றியுள்ளனர்.ஹோக்கந்தர மற்றும் ரத்மலான பகுதிகளிலே இந்த பொலித்தீன் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.

20 மைக்ரோனுக்கு குறைவான பொலித்தீன்களே கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதனை தயாரித்த ஹோக்கந்தர பிரதேசத்தின் நிறுவனம் ஒன்றில் இருந்து 510 பெக்கட்டுகளும்,ரத்மலான பிரதேச பொலித்தீன் உற்பத்தி நிறுவனத்திலிருந்து 410 பெக்கட்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்கள் போலி வியாபார பெயருடனும்,போலி ஆவணங்களுடனும் பொலித்தீனை விற்பனை செய்துவந்துள்ளதாக இதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், நிறுவனங்களின் பதிவு இலக்கங்களும் போலியானவை என்று தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, குறித்த இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள் இருவரும் எதிர்வரும் 29ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.