சிந்துவின் சாதனையை காறித்துப்பினால் என்னவாகும்? இயக்குனரின் சர்ச்சைப் பதிவு!!

1570

P.V.-Sindhu

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவை இந்தியாவே கொண்டாடிக்கொண்டிருக்கின்ற நிலையில், மலையாள இயக்குநர் ஒருவர் சிந்துவை அவமதிக்கும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

Ozhivu Divasathe Kali என்ற படத்தினை இயக்கிய மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், எல்லோருமே சிந்துவின் சாதனையை கொண்டாடுகிறார்கள். நான் அந்த சாதனையில் காறி துப்பினால் என்னவாகும்? இதை பெரிதாக கொண்டாட என்ன இருக்கிறது?” என்று கூறியுள்ளார்.

இயக்குநரின் இந்த பதிவுக்கு கண்டனங்கள் குவிந்துள்ளன. மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற, சாக்ஷி மாலிக் குறித்து பேஸ்புக்கில் அவமானகரமாக கருத்து கூறிய உத்தரபிரதேச நபர் மீது பொலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.