காதலியை கவருவதற்கு சூப்பர் மேனாக மாற முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த வீபரீதம்!

432

625.0.560.350.160.300.053.800.668.160.90
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர், இளம் பெண்ணை கவருவதற்காக ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு குதிக்க முற்பட்டபோது கட்டிடங்களுக்கிடையில் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Pittsburgh பகுதியை சேர்ந்தவர் Birdsong(22). இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார் என கூறப்படுகிற்து.

இந்நிலையில் Birdsong அப்பெண்ணை கவருவதற்காக ஒரு உணவகத்திற்கு அழைத்துள்ளார். அப்பெண் வந்த போது, அக்கட்டிடத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு குதிக்க முயன்றுள்ளார்.ஆனால் அது எதிர்பாராத விதமாக கட்டிங்களுக்கு மத்தியில் விழுந்து மாட்டிக்கொண்டார். இச்சம்வத்தை அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து Birdsong ஐ நீண்ட போராட்டத்திற்கு பின் காப்பாற்றினர்.இதில் அவருக்கு பெரிதாக காயம் ஒன்றும் இல்லை எனவும், கணுக்காலில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.