தமிழ்நாடு பிரீமியர் லீக் : முதல் வெற்றியைப் பதிவு செய்த தூத்துக்குடி அணி!!

470

TN

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் தொடக்க ஆட்டத்தில் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கப்பட்டது.

இந்நிலையில், தொடக்க ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களத்தில் மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களத்தில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தர், கவுசிக் காந்தி களமிறங்கி 4 ஓவர்கள் முடிவில் அணிக்கு 35 ஓட்டங்கள் பெற்று தந்தனர். இதனையடுத்து கவுசிக் காந்தி விக்கெட்டை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஆர். சதிஷ் கைப்பற்றினார்.

இதை தொடர்ந்து, தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 164 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. தினேஷ் கார்த்திக் இறுதி வரையில் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 165 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்திருந்த நிலையில், அடுத்ததாக துடுப்பெடுத்தாடிய சூப்பர் கில்லீஸ் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அணியின் ஓட்ட விகிதம் சரிய தொடங்கியது.

இதையடுத்து, 19 ஓவர்கள் முடிவில் 113/9 ஓட்டங்களை சூப்பர் கில்லீஸ் அணி எடுத்திருந்தது. இந்நிலையில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றது.