கொழும்பு – குருநாகல் வீதியின் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் படுகாயம்!!

1243

Accident

கொழும்பு – குருநாகல் வீதியின் வரகாபொல துல்கிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் மற்றுமொரு பயணிகள் பஸ் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காமடைந்தவர்கள் வரகாபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் இவர்களில் இருவர் கேகாலை பிரதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த தவறிய சாரதி நிறுத்தி வைத்திருந்த பஸ்ஸுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.