சேரிப் பகுதியைச் சேர்ந்த சிறுவன் படைத்த சாதனை!!

512

12

இந்தியாவின் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 11 வயதான சந்தன் நாயக் என்ற சிறுவன் ஜேர்மனியில் உள்ள பேயர்ன் முனிச்சில் கால்பந்து அகடமியில் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புவனேஸ்வரில் உள்ள சபர் சகி என்ற சேரி பகுதியைச் சேர்ந்தவன் சந்தன் நாயக் இன்று ஜேர்மனிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

சுமார் இரண்டு மாதங்கள் நடக்கும் இந்த பயிற்சியில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 120 மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். குறித்த பயிற்சியில் பங்கேற்கும் ஐந்து இந்திய ஜூனியர் கால்பந்தாட்ட வீரர்களில் சந்தன் நாயக்கும் ஒருவர்.

சந்தனின் தாயார் துகாட்டி நாயக் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து புவனேஸ்வரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் சந்தன் நாயக்கை 6ம் வகுப்பு படிக்கவைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சந்தன் நாயக் கூறுகையில், எனக்கு ரோல் மொடலாக இருப்பது ஆஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி.

பேயர்ன் முனிச்சில் விளையாட தேர்வானது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்திய அணியில் நானும் ஒரு வீரராக இடம் பெற வேண்டும் என்பது எனது விருப்பம். உண்மையில் நான் என் பயிற்சியாளருக்குதான் நன்றி சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

11