இந்திய அணியுடனான சர்வதேச T20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஓர் ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள மியாமி நகரில் இப்போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய 6 விக்கெட் இழப்புக்கு 245 ஓட்டங்களைக் குவித்தது. எவின் லூயிஸ் 49 பந்துகளில் 100 ஓட்டங்களைக் குவித்தார் அவர் ஸ்டுவர்ட் பின்னி வீசிய ஓவர் ஒன்றில் 5 சிக்ஸர்கள் உட்பட 32 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய பந்துவீச்சாளர்களில் ரவீந்திர ஜடேஜா 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜஸ்பிரிட் பம்ரா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ஓட்டங்களைப் பெற்று ஒரு ஓட்டத்தினால் தோல்வியுற்றது.
லோகேஷ் ராகுல் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்களைப் பெற்றார். ரோஹித் சர்மா 28 பந்துகளில் 62 ஓட்டங்களையும் தோனி 25 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணி வெற்றி பெறுவதற்கு கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால், ட்வைன் பிராவோ வீசிய அந்த பந்தை எதிர்கொண்ட எம்.எஸ்.தோனி விக்கெட்டை பறிகொடுத்தார்.






