தெலுங்கு படம் பாபுபங்காராம் வெற்றி பெற்றுள்ளதால் நயன்தாரா மகிழ்ச்சியில் இருக்கிறார். நயன்தாரா தமிழில் நடித்து சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றிபெற்றன.
இதனால் நயன்தாரா மார்க்கெட் சூடு பிடித்தது. சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தியதாக கூறப்பட்டது.
தெலுங்கு படநிகழ்ச்சிகளில் பங்கேற்காததால், படத்தயாரிப்பாளர் சங்கம் தெலுங்கில் நடிக்க நயன்தாராவுக்கு தடைவிதித்தது. தடை நீக்கப்பட்ட பிறகு நயன்தாரா நடிப்பில் இப்போது திரைக்கு வந்திருக்கும் தெலுங்கு படம் ‘பாபுபங்காராம்‘ வெங்கடேஷ் நாயகனாக நடித்துள்ள இது தமிழில் செல்வி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
வெங்கடேஷ் – நயன்தாரா நடித்துள்ள இந்த படம் 4 நாட்களில் ரூ.25 கோடி வசூலித்து ‘ஹிட்’ ஆகி இருக்கிறது. படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் நாகா வம்சி கூறியுள்ளார்.
ஜீவாவுடன் நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான ‘திருநாள்’ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போது தெலுங்கு படமும் வெற்றி பெற்றுள்ளதால் நயன்தாரா மகிழ்ச்சியில் இருக்கிறார்.






