பிரம்மன் படத்தில் சசிகுமாருடன் இணையும் நான் ஈ புகழ் சுதீப்!!

454

sutheep

சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி போன்ற வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்தவர் இயக்குனர் சசிகுமார். இவர் தற்போது பிரம்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனிடம் அசோசியேட் டைரக்டராக இருந்த சாக்ரடீஸ் இப்படத்தை இயக்குகிறார். இதில் சந்தானம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

நான் ஈ படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தன் மூலம் கன்னட நடிகர் சுதீப் தமிழில் பேசப்பட்டார். இவர் தற்போது பிரம்மன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க ஜோமோன் டி. ஜான் ஒளிப்பதிவு செய்கிறார். கோயம்புத்தூர் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.