என்னை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்: நடிகர் சிவகார்த்திகேயன்!!

486

siva

கோவை ஆர்.எஸ்.புரம் அர்ச்சனா தியேட்டரில் இன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற சினிமாவின் பாடல் சி.டி. மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. பாடல் சி.டி.யை சிவகார்த்திகேயன் வெளியிட பாபா தியேட்டர் உரிமையாளர்கள் பாலசுப்பிரமணியம், ரவீந்திரன், காஸ்மா திரைப்பட வினியோகஸ்தர் சிவா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பவிழம் ஜூவல்லரி லிஜோ சுங்கத், வாசன், தாடி பாலு, ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் ஆளுயர மாலை அணிவித்தனர். பின்னர் ஒரு பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் பேசினார். அவர் பேசியதாவது..

சென்னையில் மழை பெய்தும்போது கூட வியர்க்கும், ஆனால் கோவையில் எப்போதுமே ஜில்லென்று இருக்கிறது. இந்த மக்களின் அன்பும் பாசமும் வித்தியாசமாக உள்ளது. இந்த படத்தின் சி.டி. மற்றும் டிரைலர் கோவை, சேலம், திருச்சி, ஆகிய இடங்களில் வெளியிடப்பட இருந்தது. அதன்படி கோவையில் முதலில் வெளியிடப்பட்டுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ஹாலிவுட் படம்போல் இருக்காது. குடும்பத்துடன் தைரியமாக பார்த்து ரசிக்கலாம். செப்டம்பர் 6ம் திகதி இந்த படம் ரிலீசாகிறது. படம் 100 நாட்கள் கண்டிப்பாக ஓடும். 100வது நாளில் நாம் மீண்டும் சந்திப்போம் என்று அவர் கூறினார்.

சிவ கார்த்திகேயன் பேசியபோது அரங்கில் இருந்தவர்கள் இளைய சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன் என்று கூறினர். அதற்கு பதில் அளித்து பேசிய சிவகார்த்திகேயன் என்னை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள். உலகில் ஒரே சூரியன், ஒரே சந்திரன்தான். அதுபோல் ஒரே சூப்பர் ஸ்டார்தான். எனக்கு கை தட்டி ஆரவாரம் செய்தது உற்சாகமாக உள்ளது. நல்ல படம் தருவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.