அரசியல்வாதியின் உறவினரை திருமணம் செய்யவில்லை: அஞ்சலி மறுப்பு!!

587

anjali

நடிகை அஞ்சலி குறித்து தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர் அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் அவருடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் பரபரப்பான செய்தி வெளியானது.

இந்த செய்தி குறித்து அறிந்ததும் நடிகை அஞ்சலி அதிர்ச்சி அடைந்துவிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..

கற்றது தமிழ் தொடங்கி இன்று வரை பல்வேறு காலகட்டங்களில் என்னை ஆதரித்து ஊக்கமளித்த அனைத்து ஊடகங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. சமீபத்தில் நான் சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த மதகஜராஜா படத்திற்கு டப்பிங் பேச மறுப்பதாகவும், படம் சம்பந்தமான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும் செய்திகளும் அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஒருவருடன் இணைத்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அது முற்றிலும் தவறான தகவல் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இனிவரும் காலங்களில் என்னைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் தேவைப்படும் எனில் என்னுடைய மின்னஞ்சல் newsfromanjali@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.