சாரதியற்ற மினி பஸ் ஒன்று பின்லாந்தில் பரீட்சார்த்தமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியிலுள்ள வீதியொன் றில் கடந்த வாரம் இந்த பஸ் சேவையில் ஈடுபட ஆரம்பித்தது.
சாரதியற்ற கார்கள் உலகின் பல நகரங்களில் பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டுள்ளன. ஆனால், பொதுப் போக்குவரத்து சேவைக்கு சாரதியற்ற மினி பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படுவது அரிதாகும். Easymile EZ -10 எனும் இந்த பஸ் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டதாகும்.
விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட தரிப்பிடங்களில் வைத்து, பயணிகள் இந்த பஸ்ஸில் ஏறி இறங்கினர்.







