குளோபல் வுட்ஸ் மூவிஸ் சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து அறிமுக இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி இயக்கி இருக்கும் படம் மியாவ். இதில் கதாநாயகியாக நடித்து வரும் காயத்ரி தனது பெயரை ஊர்மிளா காயத்ரி என்று மாற்றி இருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது..
மியாவ் படத்தில் நான் ஒரு தைரியமான விளம்பர மொடலாக நடிக்கிறேன். இந்த படத்தில் இரண்டு பாடல்களுக்கு நான் நடனம் ஆடுவதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நடந்த ஒரு சிறிய விபத்தால் அந்த பாடல்களுக்கு என்னால் நடனம் ஆட முடியவில்லை. அந்த விபத்து என்னுடைய பெயரையே மாற்றிவிட்டது.
பாடல்களுக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி நான் கீழே விழுந்தேன். இதில் என்னுடைய முழங்கை, முழங்கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதுவரை காயத்ரி என்ற பெயரோடு இருந்த நான் அந்த விபத்துக்கு பின் ஊர்மிளா காயத்ரி என்று மாற்றிக்கொண்டேன். நிச்சயமாக இந்த பெயர் மாற்றம் என்னுடயை வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என நம்புகிறேன் என்றார்.






