இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாக இருந்தவர் சச்சின் தெண்டுல்கர். சுமார் 24 வருடங்கள் சர்வதேச அணிக்காக விளையாடிய அவர், தற்போது எஸ்.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் விளையாட்டு மேலாண்மை நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்திற்கு மிரின்மோய் முகர்ஜி என்பவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளார். இவர் டாடா குழுமத்தின் முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாவார்.
24 வருட எனது கிரிக்கெட் வாழ்க்கையில், என்னுடைய முழு கவனத்தையும் கிரிக்கெட்டின் மீதே வைத்திருந்தேன். தற்போது ஓய்வு பெற்ற பிறகு, என்னுடைய நிறுவனத்தில் உள்ளவர்கள் அர்ப்பணிப்பால் நான் ஏராளமான முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களின் சிறப்பான பணிகளால் கிடைத்த பலன்களை நான் ஏற்கனவே பார்த்துள்ளேன். மேலும், அற்புதமான முயற்சிகளை எதிர்நோக்கியிருக்கிறேன்.
நானும் என்னிடம் 16 ஆண்டுகளாக முகாமையாளராக இருந்த வினோத் நாயுடுவும் இணக்கமாகவே பிரிந்தோம். அவர் உலக ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் (WSG) பொது முகாமையாளராக இருக்கிறார். அவர் எனது நிறுவனத்தில் இணையும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால், அந்த வாய்ப்பை அவர் மறுத்து விட்டார்’’ என்றார் சச்சின்.






