Dropbox ஹெக் செய்யப்பட்டதனால் 68 மில்லியன் பயனாளர்கள் பாதிப்பு!!

465

Drop Box

வீடியோ, புகைப்படங்கள் மற்றும் கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்கும் சேவையை வழங்கி வரும் 50 கோடி பயனாளர்களை கொண்ட Dropbox நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன் திடீரென Dropbox பயனாளர்களின் ஈ-மெயில் முகவரிகளுடன், பாஸ்வேர்டுகளும் குறிப்பிடப்பட்டு ஒரு பட்டியல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

68 மில்லியன் பயனாளர்களின் கணக்கு விபரங்களும் அதில் இடம்பெற்றிருந்தன இதை Dropbox நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும் கடந்த 2012 ஆம் ஆண்டில் திருடப்பட்டிருக்கலாம் என Dropbox சந்தேகிக்கிறது, எனவே, அதன் பயனாளர்கள் உடனடியாக தங்கள் பாஸ்வேர்டுகளை புதுப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

68 மில்லியன் பயனாளர்களின் தகவல்களை திருடியது யார் என்ற விபரம் இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. பாஸ்வேர்டுகள் திருடப்பட்டிருந்தாலும், இதுவரை கணக்குகளுக்குள் ஊடுருவி எவ்வித தகவல்களும் மாற்றம் செய்யப்படவில்லை என Dropbox நிம்மதி தெரிவித்துள்ளது.

2012 இற்கு பிறகு Dropbox சேவையில் புதிதாக இணைந்து கொண்டவர்கள் தங்கள் பாஸ்வேர்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

எனினும், கணக்குகளை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அவ்வப்போது மாற்றிக் கொள்வது நல்லது என Dropbox குறிப்பிட்டுள்ளது.