வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் வறியகுடும்பங்களின் வாழ்வாதரத்திற்காக கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.
மயில்வாகனம் தியாகராசா அவர்களின் 2016ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடைநியிலிருந்து வவுனியா மாவட்டத்தில் உள்ள தோணிகல், கூமாங்குளம், நெளுக்குளம், இராசேந்திரங்குளம், பாலமோட்டை, கோயில்புளியங்குளம் போன்ற கிராமங்களில் உள்ள மிகவும் வறிய குடும்பங்களுக்கு கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தில் வைத்து கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது.
















